அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சத்து கட்சியின் தேர்தலில் தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று அறிவித்துள்ளார். கட்சியின் தேசியத் தலைவர் பதவியை கைவிடுவதற்கு தமக்கு காலம் கனிந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தலைவர் பதவியை கைவிடுவதற்கு கட்சி உறுப்பினர்கள் தம்மை அனுமதிக்க வேண்டும் என்று இன்று ஷா ஆலாம்மில் நடைபெற்ற பெர்சத்து கட்சியின் பேராளரர் மாநாட்டில் உரையாற்றுகையில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதுன் இதனை அறிவித்துள்ளார்.
முகைதினின் இந்த திடீர் அறிவிப்பை கேட்டு பேராளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் , வேண்டாம் என்று உரக்க கத்தியதுடன் பலர் அழுதனர். முகைதீனின் இந்த அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காததால் கூட்டத்தின் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.








