Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேஷனல் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேஷனல் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை

Share:

பாரிசான் நேஷனல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அக்கூட்டணியின் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. மாறாக, எதிர்நோக்கக்கூடிய சவால்கள் மற்றும் எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களின் வாயிலாக சமாளிக்கக்கூடிய திறன்களை உறுப்பினர்கள் கொண்டு இருந்தாலே போதுமானதாகும் என்று அம்னோ தகவல் பிரிவுத்தலைவர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சேயிட் தெரிவித்துள்ளார்.

தலைவரை மாற்றினால் அனைத்தும் சரியாகி விடும் என்பது அல்ல. உறுப்பினர்கள் எவ்வாறு வேலை செய்கின்றனர் என்பதைப் பொறுத்தே வெற்றித் தோல்வி உள்ளன என்று அவர் விளக்கினார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் இலக்கவியல் உலகத்தை கையாளவதில் உறுப்பினர்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.

Related News