அடுத்த மாதம் முதல் நோயாளிகளுக்கான மருந்துகளை இலவசமாக தபால் மூலம் அனுப்பும் சேவையை அரசாங்கம் நாடு முழுவதும் செயல்படுத்தவுள்ளது.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், சுகாதார அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும் என்றும், இதற்காக சுமார் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் மருந்துகளுக்கான தபால் கட்டணத்தை நோயாளிகள் செலுத்த வேண்டியதில்லை என்றும், அந்தச் செலவை அரசாங்கமே முழுமையாக ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
தற்போது மாதந்தோறும் சுமார் 80 ஆயிரம் நோயாளிகள் இந்த மருந்து தபால் விநியோகத் திட்டத்தின் மூலம் பயனடைவதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.








