பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய புதிய வடிவிலான சீருடை, சாலை போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார். இந்தப் புதிய சீருடை அமலாக்கம் குறித்தான சட்ட மசோத ஏற்றுக் கொண்டு பதிவாகிய பின் அமலுக்கு வரும் என துணை போக்குவத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சாலைப் போக்குவரத்து அதிகாரிகளுக்கான இந்தப் புதிய சீருடை, மற்றொரு நபரால போலித்தம் செய்ய முடியாத அளவில் அதன் தரம் மேம்படுத்தப்பட்டு அது அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.








