Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் சொத்துகளைச் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

மக்களின் சொத்துகளைச் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்படுகிறது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.13-

மக்களின் சொத்துகளைத் தலைவர்கள் சூறையாடும் கலாச்சாரத்தைத் துடைத்தொழிப்பதில் அரசாங்கம் வெற்றிக் கண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மக்களின் சொத்துகளைக் கொள்ளையடித்தல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்று சாமானிய மக்களுக்குச் சேர வேண்டிய உடமைகளைத் தங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டு இருந்த தலைவர்கள் இனி தலைத்தூக்க இயலாது. காரணம், தலைவர்களின் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று ஜோகூர் பாருவில் சீர்திருத்தம் மீதான 27 ஆண்டு கொண்டாட்ட மக்கள் நிகழ்விற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News