Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

Share:

அம்பாங், டிசம்பர்.02-

கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அம்பாங்கில் உள்ள Ampang Lookout Point Bukit Ampang-கில் தனிநபர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு ஆளாகிய ஒரு பாகிஸ்தான் பிரஜை மற்றும் அவரின் நண்பர்கள் காயத்திற்கு ஆளாகினர்.

சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 11 மணியளவில் அந்த பாகிஸ்தான் ஆடவரும், அவரின் நண்பர்களும் ஏறிச் சென்ற கார், சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்ற போது இந்தத் தாக்குதல் நடந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.

நின்று கொண்டிருந்த காரின் பக்கம் ஓடி வந்த ஆடவர் ஒருவர், மிக ஆவேசமாக கத்தியதாகவும், காரை வழிமறித்துக் கொண்டு, தாம் தற்காப்பு அமைச்சின் உறுப்பினர் என்றும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அவ்விடத்தில் குவிந்து விட்ட சுமார் 25 ஆண்கள், அந்த அந்நிய நாட்டு ஆடவரின் வாகனத்தை அடித்துச் சேதப்படுத்தியுடன் காரில் இருந்த மூவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 18 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு நபர்களை அம்பாங் ஜெயா போலீசார் கைது செய்துள்ளதாக ஏசிபி கைருல் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம் | Thisaigal News