கோலாலம்பூர், ஜாலான் அம்பாங், சூரியா கெ.எல்.சி.சி. முன்புறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 மின் ஸ்கூட்டர்கள் தீயில் அழிந்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய அந்த நபர் உள்நாட்டைச் சேர்ந்தவர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. நூர் டெல்ஹான் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ஹொன்டா ஆர்.எக்ஸ் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், அணிந்திருந்த ஆடை, தீப்பெட்டி முதலிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தீவைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இச்சம்பவத்திற்கான பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மேலும் 4 மோட்டார் சைக்கிள்கள் சொற்பச் சேதங்களுக்கு இலக்கானதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


