Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா ஏர்லைன்ஸ்-சின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு
தற்போதைய செய்திகள்

மலேசியா ஏர்லைன்ஸ்-சின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு

Share:

கோலாலம்பூர், ஜூலை 17-

மலேசியா ஏர்லைன்ஸ் -சுக்கு சொந்தமான MH17 விமானம், கிழக்கு UKRAINE-னில் சுட்டு வீழ்த்தப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி, நிகழ்ந்த அச்சம்பவத்தில், BOEING 777 விமானத்தில் பயணித்திருந்த 283 பயணிகளும் 15 விமான பணியாளர்களும் உயிரிழந்தனர்.

அவர்களில், 43 பேர் மலேசியர்களாவர். எஞ்சியவர்கள், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், பலியானவர்களில் ஆக அதிகமாக 198 நெதர்லாந்து பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் அனைவருக்கும் நீதியைப் பெற்று தரும் நோக்கில், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

வழக்குகளின் விசாரணைக்காக, மத்திய நெதர்லாந்திலுள்ள GILZE-RIJEN இராணுவ தளத்தில்,விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து கிடைத்த பாகங்களைக் கொண்டு, மாதிரி விமானம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு