பொது இடத்தில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக கைவிடப்பட்டு கிடந்த காரின் பூத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. ஷா ஆலாம், செக்ஷன் 30, தாமான் ஶ்ரீ ஓர்கிட்டில் கைவிடப்பட்ட ஹோட்டா சிட்டி காரிலிருந்து துர்நாற்றம் வீசியத்தை கண்ட அப்பகுதி மக்கள் நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் அந்த காரை திறந்து பார்த்த போது காரின் பூத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கால்கைகள் கட்டப்பட்டு, பிளாஸ்டிக் பையில சுற்றுப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்சே அனாக் எம்போல் தெரிவித்தார்.
இறந்து கிடந்த நபர் 47 வயது இந்தோனேசியப் பிரஜை என்றும் சவப்பரிசோதனைக்காக சடலம் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடைய இச்சம்பவத்தை கொலையென வகைப்படுத்திய ரம்சே குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ஒரு பெண் மற்றும் மூவரை போலீசார் கைது செய்து இருப்பதாக குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


