Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்
தற்போதைய செய்திகள்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

Share:

மலேசிய அரசியலின் 'யங் ஸ்டார்' சையத் சாதிக்கும், பிரபல நடிகை பெல்லா அஸ்டில்லாவும் தங்கள் புதிய வாழ்க்கைப் பயணத்தை நிச்சயதார்த்தத்துடன் இன்று மார்ச் 28 ஆம் தேதி தொடங்கியுள்ளனர்.

சபா, கோத்தா கினபாலு மலை உச்சிக்கு சென்றபோது, சையத் சாதிக் தனது காதலை பெல்லாவிடம் தெரிவித்துள்ளார். அங்கு அவர் பெல்லாவிற்கு மோதிரம் அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர்களது நட்பு ஒரு சாதாரண தொழில்முறை கூட்டணியாகவே தொடங்கியது. மக்களுக்காக 6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியைத் திரட்டிய அந்தப் பயணம், தெரியாமலேயே எங்கள் இரு இதயங்களையும் இணைத்துவிட்டது" என சையத் சாதிக் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

"நான் கேட்டேன், அவர் சம்மதம் சொன்னார். இது கதையின் முடிவல்ல, ஒரு அழகான ஆரம்பம்" எனக் குறிப்பிட்டுள்ள சையத் சாதிக், இன்று பிற்பகலில் நடைபெற்ற தங்கள் நிச்சயதார்த்த விழாவிற்கு அனைவரின் பிரார்த்தனைகளையும் ஆசியையும் கோரியுள்ளார்.

இந்த நிச்சயதார்த்த விழா அஸ்ட்ரோ அவானி மற்றும் நேரலை ஒளிபரப்புகள் மூலம் ரசிகர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. அரசியல் மற்றும் திரைத்துறை என இரு வேறு துருவங்கள் இணைந்திருப்பது மலேசிய மக்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News