Jun 27, 2026
Thisaigal NewsYouTube
இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்து: 11 வயது சிறுவன் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்து: 11 வயது சிறுவன் உயிரிழப்பு

Share:

கெடா மாநிலம், சிக் பகுதியில், சிறுவர்கள் ஓட்டிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில், 11 வயது சிறுவன் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது, ஜாலான் கம்போங் பெத்தோங் சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 11 வயது சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து, 13 வயது சிறுவன் ஓட்டிய மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் தலையில் கடுமையான காயங்களுக்குள்ளான 11 வயது சிறுவன், சிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 8.45 மணியளவில் உயிரிழந்ததாக சிக் மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுரி சமான் தெரிவித்துள்ளார்.

Related News