Jul 10, 2026
Thisaigal NewsYouTube
ஷியா மத நடவடிக்கைகள்: பெட்டாலிங் ஜெயாவில் அதிரடி சோதனை; 226 வெளிநாட்டினரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஷியா மத நடவடிக்கைகள்: பெட்டாலிங் ஜெயாவில் அதிரடி சோதனை; 226 வெளிநாட்டினரிடம் விசாரணை

Share:

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள புசாட் பெர்டாகாங்கான் லாகூன் பெர்டானா வளாகத்தில், ஷியா மதக் கோட்பாடுகள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறையான ஜையிஸ் கடந்த வியாழக்கிழமை அங்கு அதிரடி கூட்டுச் சோதனை நடத்தியது.

கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், போலீசார், தீயணைப்பு மீட்புத் துறை, குடிநுழைவுத்துறை , மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், சுபாங் ஜெயா மாநகர மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து 120 அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையின் போது, அந்த வளாகத்தில் இருந்த 147 ஆண்கள், 51 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் என மொத்தம் 226 வெளிநாட்டினர் கண்டறியப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சமய அதிகாரிகளை அவமதித்தல், முரணான கருத்துகளைப் பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவர்தகள் மீது ஜாயிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்