Oct 16, 2026
Thisaigal NewsYouTube

துன் மகாதீருக்கு எதிராக குற்றவியல் வழக்கு: முடிவடைதற்கு மூன்று ஆண்டுகள் ஆகலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துன் மகாதீருக்கு எதிராக குற்றவியல் வழக்கு: முடிவடைதற்கு மூன்று ஆண்டுகள் ஆகலாம்

கோலாலம்பூர், டிச.7-


பத்து பூத்தே தீவு இறையாண்மை தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு விசாரணை முடிவடைவதற்கு மேலும் 3 ஆண்டுகள் ஆகலாம் என்று சட்ட வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.

99 வயதான துன் மகாதீருக்கு எதிராக அரச விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ள இந்த குற்றவியல் வழக்கு நிறைவு பெறுவதற்கு 2028 ஆம் ஆண்டு ஆகலாம் . . இதில் மேல்முறையீட்டிற்கான கால அவகாசம் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று அந்த நிபுணர் குறிப்பிடுகிறார்.

குறைந்த பட்சம் இரண்டு மூன்று ஆகலாம். அதிகப் பட்சம் தெரியவில்லை என்று வழக்கறிஞர் Nur Mardhiah hawan Zulkefli தெரிவித்துள்ளார்.

துன் மகாதீருக்கு எதிராக குற்றவியல் வழக்கில் தேவையான ஆதாரங்களை திரட்டுதல், சாட்சிகளை அடையாளம் காண்பது, விசாரணை நடத்துவது, என்று பல்வேறு நடைமுறைகளை கடந்தே வழக்கிற்கு தீர்வு காண முடியும் என்று அந்த சட்ட வல்லுநர் கூறுகிறார்.

துன் மகாதீர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பத்து பூத்தே தீவு உட்பட இதர இரண்டு தீவுகள் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுத்து ஏமாற்றியதாக கிரிமினல் சட்டப்பிரிவு 415 பிரிவின் கீழ் அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யும்படி மான்னரால் அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பரிந்துரை செய்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →