புக்கிட் காயு ஹீத்தாம், நவம்பர்.22-
நேற்று வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாய்லாந்தின் ஹட்யாயில் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான மலேசியர்கள் Hatyai–யில் சிக்கித் தவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 33 வயது Wan Nur Asyikin Wan Azmi கூறுகையில் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் வானிலை நன்றாக இருக்கும் போது Hatyai– யிக்கு வந்ததாகக் கூறினார்.
இருப்பினும் மாலை நேரத்தில் கடும் மழையாகும். இந்த அடை மழையில் அதிகாலை 3 மணியளவில் தண்ணீர் உயரத் தொடங்கியது. சிறிது நேரத்தில், ஹட்யாய் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், வெள்ள நீர் கரைபுரண்டோடுவதாகவும் குறிப்பிட்டார்.
எந்தவொரு கடை வளாகமும், குறிப்பாக உணவு விற்பனைம் வளாகங்களும் திறக்கப்படாததால் தாங்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியதாக அந்த மலேசிய மாது கூறினார்.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தனது 9 மாத குழந்தையான Nadhif Alfian Khairul Anwar ருக்குத் தேவையான உணவு, பால் மற்றும் நெப்டின்கள் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், வெள்ளம் வடியவில்லை என்றால் தங்கள் நிலைமை மிகவும் தர்ம சங்கடமாகி விடும் என்று அந்த மாது கூறுகிறார்.
வெள்ளத்தினால் வெளியேற முடியாத நிலையில் தாங்கள் இருப்பதால் ஹோட்டலிலேயே அடைப்பட்டுக் கிடப்பதாக அந்த மாது தெரிவித்துள்ளார்.








