Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன

Share:

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மலேசியத் தினத்தன்று கோலாலம்பூர் மாநகரில் நடத்தப்பட்ட மலேசியாவை காப்பாற்றுங்கள் என்ற சட்டவிரோதப் பேரணி தொடர்பில் போலீசார் மூன்று விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளனர்.

இந்தப் பேரணியை ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் 29 சந்தேகப் பேர்வழியை இலக்காக கொண்டு இந்த மூன்று விராணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் , முகமது ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

மேல் நடவடிக்கைக்காக இந்த மூன்று விசாரணை அறிக்கைகளும் நாளை வெள்ளிக்கிழமை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News