Aug 2, 2026
Thisaigal NewsYouTube
நிபுணத்துவ திறமைகளை வளர்க்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

நிபுணத்துவ திறமைகளை வளர்க்க வேண்டும்

Share:

மலேசியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பம் தொடர்பான வேலை வாய்ப்பு சூழலை உருவாக்கும் வகையில் மக்கள் மத்தியில் அத்துறை சார்ந்த நிபுணத்துவ ஆற்றல்களை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

திறமைகளை வளர்ப்பது மூலமே மலேசியாவின் கெளரவத்தை அனைத்து நிலைகளிலும் விரிவடைந்து வரும் இலக்கவியல் உருமாற்றுப் பார்வையிலிருந்து உயர்த்த முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இலக்கவியல் பொருளாதார மையமான பெடி, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, தொடர்புத்துறை மற்றும் இலக்கவியல் அமைச்சு ஆகியவற்றுக்கு அடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மக்களுக்கு உதவக்கூடிய நவீன தொழில்நுட்ப மேம்பாட்டில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இன்று புத்ராஜெயா, அனைத்துலக மாநாட்டு மையத்தில் பெடி மடானி மாநாட்டு மன்றக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்த வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் தொடர்புத்துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், துணை அமைச்சர் தியோ நீ சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்