வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடுவதற்கு பெர்சத்து கட்சியின் சாயாப் பெர்செகுத்து சார்பாக இந்தியர்களுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்பதனை அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசீன் அறிவிப்பார் என்று அப்பிரிவின் இந்தியர் பிரிவுத் தலைவர் கானா பிரகாசம் செபாஸ்தியன் தெரிவித்துள்ளார்.
இக்கட்சி மலாய்காரர்கள் மத்தியில் மட்டுமே மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நிலையில், தற்போது நிறை இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதில் இணைந்துள்ளதாகவும் அஃப்லிங்கம் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் வாரியத் தலைவரும், தற்போதைய அறங்காவலருமான கானா பிராகாசம் மேலும் விவரித்தார்.
அரசியலில் ஏற்கெனவே பிபிபி கட்சியில் இணைந்து, சுபாங் தொகுதி தலைவராகவும், கலாச்சாரப் பிரிவுத் தலைவராகவும் கானா பிரகாசம் பொறுப்பேற்றிருந்த போதிலும், அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் பெர்சத்து கட்சியின் சாயாப் பெர்செகுத்துவில் இணைந்து தற்போது 3 ஆண்டுக்காலமாக சேவையாற்றி வரும் வேளையில், விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் நாடறிந்த நகைச்சுவை நடிகருமான இவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


