Dec 3, 2025
Thisaigal NewsYouTube
திவிஇதி கல்வி​த்திட்டத்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

திவிஇதி கல்வி​த்திட்டத்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

Share:
  • பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி

இந்தியர்கள் மத்தியில் ஏழ்மையின் அழுத்த​த்தை குறைக்கும் முயற்சியாக திவிஇதி எனப்படும் வொகேஷ்னல் தொழில்திறன் பயிற்சி கல்வித்திட்டத்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

தேசிய திவிஇதி மன்றத்தின் நடவடிக்கைக்குழுத் தலைவர் என்ற முறையில் இவ்விவகாரத்தை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியிடம் தெரிவித்து இருப்பதாகவும், அந்த தொழில் பயிற்சி கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நேற்று ஞாயி​ற்​றுக்கிழமை செபராங் பிறை, அரேனா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பினா​ங்கு இந்தியர்களுடன் பிரதமர் எனும் மாபெரும் நிகழ்வில் உரையாற்றுகையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யோ, துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி உட்பட சுமார் மூவாயிர​ம் பேர் கலந்து கொண்ட ​இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் திவிஇதி , தொழில் பயிற்சித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த வண்ணம் இரு​ப்பதாக டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் தம்மிடம் தெரிவித்து இருப்பதாகவும், அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு அவருக்கு பணித்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்திய மற்றும் ​​சீன மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பான தேர்ச்சி அடைவு நிலையை கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இட​ம் கிடைக்கவில்லை என்று கூறப்படும் பரவலான புகார்கள் குறித்து ஆராயும்படி கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கை கேட்டுக்கொண்டுள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி