Dec 2, 2025
Thisaigal NewsYouTube
துணையமைச்சர் தியோ நீ சிங் சிங்கப்பூர் பயணம்
தற்போதைய செய்திகள்

துணையமைச்சர் தியோ நீ சிங் சிங்கப்பூர் பயணம்

Share:

இலக்கவியல் தொழில்நுட்ப துறையின் எதிர்காலப் பங்கு பற்றிய ஆழமான விவாதங்களைச் செயல்படுத்தும் ஆசியா டெக் அண்ட் சிங்கப்பூர் சந்திப்பில், தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் கலந்து கொண்டார்.

தியோ நீ சிங் கடந்த திங்கட்கிழமை தொடங்கி, சிங்கைக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில் , மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் பங்கு கொண்டுள்ளனர்.

பயணத்தின் முதல் நாளில், தியோ, அக்குடியரசின் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சின் மூத்த அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக அமைந்தது என தியோ கூறினார்.

"சிங்கையில் நடப்பில் உள்ள சமூக ஊடக வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட சட்டம் குறித்தும் விவாதிகப்பட்டது. மலேசியாவில் இம்முறையைச் செயல்படுத்துவது பொருத்தமானதா என்பதை நாங்கள் ஆராய்வோம்" என்று தியோ கூறினார்.

"பல நாடுகளில் தேசிய இலக்கவியல் ஐடி அமலில் உள்ளது. இது மலேசியாவில் அமல்படுத்துவது குறித்து இதற்கு முன்பு விவாதிக்கப்பட்டது, ஆனால் விரைவான முன்னேற்றம் எதுவும் இல்லை. எனவே இது குறித்து சிங்கப்பூரின் அனுபவத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்" என்று தியோ தெரிவித்தார்.

Related News