Aug 18, 2026
Thisaigal NewsYouTube
செனட்டர் பதவிக்கு 25 வயது! – இளைஞர் ஆலோசனை மன்றத்தில் புதிய முன்மொழிவு
தற்போதைய செய்திகள்

செனட்டர் பதவிக்கு 25 வயது! – இளைஞர் ஆலோசனை மன்றத்தில் புதிய முன்மொழிவு

Share:

இளைஞர்களின் குரலையும் கருத்துகளையும் அரசின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தேசிய இளைஞர் ஆலோசனை மன்றத்தின் 35ஆவது தவணையின் 2025–2026ஆம் ஆண்டுக்கான மூன்றாவது கூட்டம் இன்று செராஸ், அனைத்துலக இளைஞர் மையத்தில் நடைபெற்றது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமட் தௌஃபிக் ஜொஹாரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து 142 இளைஞர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இளைஞர் மேம்பாடு தொடர்பாக மூன்று முக்கிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டன.

அவற்றில், நாடாளுமன்ற மேலவையான செனட்டில் உறுப்பினராகும் குறைந்தபட்ச வயதை 25 ஆகக் குறைக்க, கூட்டாட்சி அரசியலமைப்பைத் திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்பது முக்கியமான முன்மொழிவாகும்.

மேலும், அரசியல் சீர்திருத்தம், பொறுப்புக்கூறல் மற்றும் புதிய தலைமுறை தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியான பதவிக்கால வரம்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

அத்துடன், நாட்டின் எதிர்கால எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணுசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மேம்பாட்டில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.

இளைஞர்களின் கருத்துகள், எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை அரசின் கொள்கை உருவாக்கத்தில் பிரதிபலிப்பதே தேசிய இளைஞர் ஆலோசனை மன்றத்தின் முக்கிய நோக்கம் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News