லங்காவி, செப்டம்பர்.06-
பூலாவ் லங்காவி அருகே ஜாலான் கோல மூடாவில் இன்று சனிக்கிழமை கார் ஒன்று சைக்கிளோட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இன்று காலை சுமார் 8.30 மணியளவில் நடந்த இவ்விபத்தில் லோ பெங் செங் என்ற அந்த 28 வயது சைக்கிளோட்டி, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக லங்காவி ஓசிபிடி துணை ஆணையர் ஷாரிமான் அஷாரி தெரிவித்துள்ளார்.
தனது சைக்கிளோட்டும் குழுவினருடன் வந்த அந்நபர், சக சைக்கிளோட்டியுடன் மோதுவதைத் தவிர்க்க முயன்ற போது எதிரே வந்த கார் அவரை மோதியதாகவும் ஷாரிமான் அஷாரி குறிப்பிட்டுள்ளார்.








