Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு இளம் பெண்கள் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு இளம் பெண்கள் மரணம்

தெமர்லோ, ஜூன்.12-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதியதில் இரு இளம் பெண்கள் மரணமுற்றனர். இச்சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் பகாங், தெமர்லோ, ஜாலான் தெங்கு இஸ்மாயில் சாலையில் நிகழ்ந்தது.

அந்த இரு பெண்களும் சமிக்ஞை விளக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 18 வயது இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். சிவப்பு நிற சமிக்ஞை விளக்கைக் கண்டதும், அந்த இரு பெண்களும் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளையில், அவர்களை முந்திச் செல்ல முனைந்த பெரோடுவா பெஸா கார், அந்தப் பெண்களின் மோட்டார் சைக்கிளை மோதியதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹாசான் தெரிவித்தார்.

அந்த காரைச் செலுத்திய 38 வயதுடைய நபரின் அவசரப் போக்கினால் இவ்விபத்து நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த இரு பெண்கள் தாமான் தெமர்லோ ஜெயாவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு