ஜகார்த்தா, ஜனவரி.25-
இந்தோனேசியா, மேற்கு ஜாவாவின் பாண்டுங் பகுதியில் உள்ள Pasirlangu கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று மதியம் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த இயற்கைச் சீற்றத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 81 பேர் இன்னும் மாயமாகியுள்ள நிலையில் இந்தோனேசிய மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜகார்த்தவிலுள்ள மலேசியத் தூதரகம் அங்குள்ள மலேசிய மாணவர்களுடனும் குடிமக்களுடனும் தொடர்பில் இருப்பதோடு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், உதவி தேவைப்படும் மலேசியர்கள் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் மார்ச் வரை நீடிக்கும் பருவமழைக் காலத்தில் இத்தகைய வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், காடுகளை அழிப்பதே இத்தகைய பேரிடர்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.








