ஷா ஆலாம், ஆகஸ்ட்.14-
பண்டான் எம்.பி. ரஃபிஸி ரம்லியின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புத்ராஜெயா, ஐஓஐ சிட்டி பேரங்காடி மையத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் ரஃபிஸியின் 12 வயது மகன் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸேலி காஹார் தெரிவித்தார்.
எனினும் ரஃபிஸியின் குடும்பத்தினருக்கு எத்தகைய பாதுகாப்பு அளிக்கப்படும் என்பது குறித்து அவர் விவரிக்கவில்லை.
இன்று ஷா ஆலாமில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஷாஸேலி காஹார் இதனைத் தெரிவித்தார்.








