Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பகாங் அரண்மனை எந்தவொரு அரசாணையும் பிறப்பிக்கவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பகாங் அரண்மனை எந்தவொரு அரசாணையும் பிறப்பிக்கவில்லை

டிச.10-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் அவரின் புதல்வர் Datuk Mohamad Nizar Najib சமர்ப்பித்துள்ள அப்பிடெவிட் மனுவைத் தொடர்ந்து நாட்டின் 16 ஆவது மாமன்னரின் அரசாணை தொடர்பில் பகாங் அரண்மனை எந்தவொரு அறிக்கையும் வெளியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லாவிற்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக பகாங் மாநில சட்ட ஆலோசகர் Datuk Seri Saiful Edris தெரிவித்துள்ளார்.

பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் வழங்கிய ஆலோசனை மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சைபுல் இட்ரிஸ் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →