கோலாலம்பூர், நவம்பர்.02-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஏற்பட்டுள்ள முதுகுவலி காரணமாக இன்று அவர் பங்கேற்கவிருந்த பகாங் மாநில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமரின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, அவரின் பகாங் மாநில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமரின் இன்றைய பகாங் மாநில நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்வாக தெமர்லோ, லூரா செமாந்தானில் சிறு வணிர்களுக்கான கருத்தரங்கை நிறைவு செய்து வைப்பதாக இருந்தது.








