கிள்ளான் பள்ளத்தாக்கு என்கேவி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் டிரெய்ல் லோரியின் சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயரிழந்தார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்தது.
சுங்கை பூலோ, தாமான் மாத்தாங் ஜெயாவை சேர்ந்த 30 வயதுடைய மொஹமாட் ஹானஃபி முஹமாட் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்டையினர் அடையாளம் கூறினர். சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி கோத்தா டாமன்சாராவிலிருந்து ஜாலான் டூத்தாவை நோக்கி சென்று கொண்டிருத் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகா உதவி இயக்குநர் அஹ்மாட் முகிஸ் முக்தார் தெரிவித்தார்.








