தைப்பிங், ஜாலான் போக்கோ அசாம் தம்பாஹன் னில் கார் ஒன்றின் கதவை தலைக்கவசத்தால் பலம் கொண்டு தட்டி, சர்ச்சையை ஏற்படுத்திய ஆடவரை போலீசார் கைது செய்தனர். 29 வயதுடைய அந்த நபர், நேற்று இரவு 8.45 மணியளவில் போக்கோ அசாம் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.
ஒரு வேலையற்றவரான அந்த மோட்டார் சைக்கிளோட்டி, காரோட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியைக்கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்து மீறல் தொடர்பில் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையினால் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ரஸ்லாம் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


