Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கேகே சூப்பர் மார்ட் மற்றும் ஆர்எச்பி வங்கி கூட்டணியில் மாணவர் நலனுக்கான சிறப்புத் திட்டம்
தற்போதைய செய்திகள்

கேகே சூப்பர் மார்ட் மற்றும் ஆர்எச்பி வங்கி கூட்டணியில் மாணவர் நலனுக்கான சிறப்புத் திட்டம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.06-

கேகே சூப்பர் மார்ட் மற்றும் ஆர்எச்பி இஸ்லாமிய வங்கி பெர்ஹாட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு திட்டமிட்ட ஒத்துழைப்பு மேலாண்மை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம் மாணவர்களின் நிதி நலனுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் “Merchant Rewards Campaign” என்ற வணிகர் பரிசுத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஓராண்டு காலத் திட்டம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் RHB MySiswa Debit Card-i மற்றும் RHB MyTVETKPM Debit Card-i பெற்றுள்ள மாணவர்கள் KK Reward மொபைல் பயன்பாட்டின் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இரட்டிப்பு கேகே நாணயப் பரிசுகளைப் பெறலாம்.

இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்வில், நாடு முழுவதும் உள்ள 61 கல்வி நிறுவனங்கள், அதாவது பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய கேகே சூப்பர் மார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய், இந்த ஒத்துழைப்பை நிறைவேற்ற அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “கேகே சூப்பர் மார்ட் ஒரு சில்லறை வணிக நிறுவனமாக மட்டுமல்ல; சமூக முன்னேற்றத்திற்காகவும் தேசிய வளர்ச்சியின் பங்குதாரராகவும் செயல்படுகிறது. Kad MySiswa மற்றும் Kad MyTVETKPM திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு வங்கிப் பயன்பாடும், வணிகச் சலுகைகளும், மேலும் KK Reward முறையிலான கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகின்றன. இது நமது சமூகத்திற்கு, குறிப்பாக மலேசியாவின் இளம் தலைமுறைக்கும் திருப்பித் தரும் எங்கள் உறுதியின் வெளிப்பாடாகும் என்றார்.

Related News

 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்