கோலாலம்பூர், அக்டோபர்.09-
நாளை அக்டோபர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருகிறது. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து பட்ஜெட்டின் உத்தேச பரிந்துரை மீதான நிதி அறிக்கை, மரியாதை நிமித்தமாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்வு செய்தார்.
இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் அன்வார், தம்மிடம் நிதி அறிக்கையைச் சார்வு செய்ததை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட் குறித்து நேற்று புத்ராஜெயாவில் ஊடகத்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்த நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார், மடானி அரசாங்கம் தாக்கல் செய்யவிருக்கும் நான்காவது பட்ஜெட், மக்களைப் பாதுகாப்பதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் அடித்தளங்களை வலுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துவதாக இருக்கும் என்றார்.








