Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஹண்டாவைரஸ் அச்சுறுத்தல்: பினாங்கு துறைமுகத்தில் சுகாதாரக் கண்காணிப்பு தீவிரம்
தற்போதைய செய்திகள்

ஹண்டாவைரஸ் அச்சுறுத்தல்: பினாங்கு துறைமுகத்தில் சுகாதாரக் கண்காணிப்பு தீவிரம்

Share:

உலகளாவிய சொகுசுக் கப்பல் ஒன்றில் ஹண்டாவைரஸ் தொற்று பரவியதாக வெளியான அனைத்துலக அறிக்கைகளைத் தொடர்ந்து, மலேசியாவின் பினாங்கு ஸ்வெட்டன்ஹாம் பியர் கப்பல் முனையத்தில் சுகாதாரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மிகக் கடுமையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், பயணிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பினாங்கு துறைமுக ஆணையம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது அனைத்துலக சுகாதார விதிகளின்படி, சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவத் துறைகளுடன் இணைந்து கப்பல்களில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் எலிகள் மூலமாக பரவும் வைரஸ் கண்காணிப்பு ஆகியவை பலப்படுத்தப்பட்டுள்ளன.

மலேசியா இந்த வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள முழுத் தயார்நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு உறுதி அளித்துள்ளது. காய்ச்சல், தசை வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள பயணிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும், எலிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு