நான்காம் படிவம் பயிலும் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த 11 குற்றங்களுக்காகவும் பாலியல் துன்புறுத்தல் செய்த 12 குற்றங்களுக்காகவும் 36 வயது ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுக்க வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆடவருடன் மகளின் பாலியல் குற்றங்களை மறைத்த குற்றத்திற்காக அவரின் மனைவியும் கைதாகியுள்ளார்.
கடந்த 2020 ஆண்டு முதல் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்து வந்த அந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கெ.எல்.ஐ.ஏ. 2 அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸைனுல் சமஹ் தெரிவித்தார். விசாரணை முழுமை அடைந்து விட்டதாகவும் நாளை அவ்விருவரும் ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவர் என அவர் தெரிவித்தார்.








