Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முதலையை பிடிக்க பொறி ஏற்பாடு
தற்போதைய செய்திகள்

முதலையை பிடிக்க பொறி ஏற்பாடு

Share:

சிலாங்கூர், செரென்டா, தாசிக் கியாம்பாங் -வில் ஐந்து முதல் ஆறு அடி நீளம் கொண்ட முதலை இருப்பதை கண்டறிந்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கினர். சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை முதலையை பிடிப்பதற்கு பொறிகளை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இம்மாதம் தொடக்கத்தில் தொடங்கிய இந்நடவடிக்கை அவ்வன விலங்கு பொறியில் பிடிப்படும் வரை தொடரப்படும் என்று சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை தலைவர் வான் முஹமட் அடிப் வான் முஹமாட் யுசோ தெரிவித்தார்.

குடியிருப்பு பகுதியில் இந்த ஏரி இருப்பதால் பொது பாதுகாப்பு மற்றும் முதலையை மற்றொரு வாழ்விடத்திற்கு இடமாற்றம் செய்யும் நோக்கத்திற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக முஹமாட் அடிப் கூறினார்.
ஏரியில் மீன் பிடிக்க செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர் எச்சரித்தார்.

Related News