Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

கிள்ளான், நவம்பர்.30-

கிள்ளானில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய ஆடவர் ஒருவர் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு தென் கிள்ளான், தாமான் மெஸ்ரா இண்டா வீடமைப்புப் பகுதியில் சாலையோரத்தில் நிகழ்ந்தது. இது குறித்து காவற்படை இரவு 8.35 மணியளவில் தகவல் பெற்றதாக சிலாங்கூர் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களைக் காவற்படையினர் முழு வீச்சில் புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவற்படையைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளஙகளில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, வந்த தகவலின்படி, அந்த வீடமைப்புப் பகுதியில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். என்ன நடந்தது என்பதைச் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்த போது ஆடவர் ஒருவர் வாகனத்தில் சுடப்பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட இந்திய நபர், தனது வீட்டிற்கு அருகில் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தை நிறுத்திய போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் காவற்படைத் தடயவியல் சோதனை மேற்கொண்ட நிலையில், சூடுபட்டவரின் தாயார் என்று நம்பப்படும் பெண்மணி ஒருவர், இரவு 11 மணியளவில் காணப்பட்டார். இறந்தவர் தனது மகன் என்று கூறியவாறு துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் அந்த மாது கதறி அழுது கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்