May 22, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து கார்கள் சேதமுற்றன
தற்போதைய செய்திகள்

ஐந்து கார்கள் சேதமுற்றன

Share:

பினாங்கு, மே 11-

பினாங்கு, ஜாலான் மக் அலிஸ்டர் சாலையில் இன்று காலை 10 மணியளவில் ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் 5 கார்கள் கடுமையாக சேதமுற்றன என்று பொது தற்காப்புப்படை அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிருடன் சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் விழுந்து கிடக்கும் மரக்கிளைகள் மத்தியில் சிக்கிக்கிடக்கும் கார்களை அகற்றும் பணியில் பினாங்கு மாநகர் மன்றத்தினர், தீயணைப்பு, மீட்புப்படையினர் மற்றும் பொது தற்காப்பு படையினர் ஈடுபட்டனர்.

இதன் தொடர்பில் பினாங்கில் சாலையோரங்களில் மிக உயரமாக வளர்ந்து விட்ட மரங்களை கவாத்து செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு பினாங்கு மாநகர் மன்றம் உரிய திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று புலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் Joshua Woo Aze Zeng வலியுறுத்தியுள்ளார்.

Related News