Jan 18, 2026
Thisaigal NewsYouTube
அயோப் கான் சிஜடி இயக்குநராக நியமனம்
தற்போதைய செய்திகள்

அயோப் கான் சிஜடி இயக்குநராக நியமனம்

Share:

அரச மலேசியப் போலீஸ் படையின் துணிச்சல் மிகுந்த "சிங்கம்" என்று வர்ணிக்கப்படும் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறையின் புதிய சிஜடி இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி காலம் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக போலீஸ் படையின் செயலாளர் நூர்சியா சாடுட்டின் தெரிவித்துள்ளார்.
அரச மலேசியப் போலீஸ் படையில் குற்றவியல் தடுப்பிற்கான அதிகாரமிக்க மிக உயரிய பதவியான சிஜடி இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள 57 வயதான அயோப் கான், போலீஸ் படையில் "திருவாளர் கைசுத்தம்" என்று புகழப்பட்டவர் ஆவார்.
தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநரான பதவி வகித்து வரும் அயோப் கான், பணி ஓய்வுப்பெறும் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் க்கு பதிலாக அப்பதவியில் அமரவிருக்கிறார்.
புக்கிட் அமானில் பங்கரவாதத் துடைத்தொழிப்பு பிரிவின் உதவி இயக்குநர், ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் உட்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவரான அயோப் கான், ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக இருந்த போது, இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக தருவிக்கப்படும் கள்ளக்குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி அளித்த ஜோகூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய கும்பலை முறியடித்தது இவரின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
போலீஸ் படையின் நம்பகத்தன்மையை மீட்டெக்க அயோப் கான், நாட்டின் போலீஸ் படைத் தலைவாக நியமிக்கப்பட வேண்டும் என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் எங்கு அகமாட் ஃபட்சில் அலி அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பரிந்துரை செய்து இருந்தார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!