பெந்தோங், டிசம்பர்.15-
வாகனத்தை அபாயகரமானச் செலுத்தி, தம்பதியரை மோதித் தள்ளி, மரணம் விளைவித்ததாக ஆடவர் ஒருவர், பெந்தோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
40 வயது லீ காங் ஃபூங் என்ற அந்த ஆடவர் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் பெந்தோங், ஜாலான் பெந்தோங் – கோம்பாக் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மெர்சடிஸ் பென்ஸ் காரினால் மோதப்பட்ட 51 வயதுடைய கர்மிலாவாத்தி முகமட் யாகோப் மற்றும் அவரின் கணவர் முகமட் நஸ்ரி முகமட் சால்லே ஆகியோர் இந்தச் சம்பவத்தில் மரணமுற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








