Oct 8, 2026
Thisaigal NewsYouTube

செராஸில் வெளிநாட்டவர் குத்திக்கொலை: 12 மணி நேரத்திற்குள் மியன்மார் நாட்டவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
செராஸில் வெளிநாட்டவர் குத்திக்கொலை: 12 மணி நேரத்திற்குள் மியன்மார் நாட்டவர் கைது

செராஸ் தாமான் மலூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்தப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 12 மணி நேரத்திற்குள் மற்றொரு வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

20 வயதுடைய அந்நபர், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்களால் நேற்று காலை 10 மணியளவில் சென்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைவியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யபட்ட 30 வயது ஆடவர் மியன்மார் நாட்டவர் என்றும், அவருக்கு முந்தைய குற்றப்பதிவு எதுவும் இல்லை என்றும் ஃபாடில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →