Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மனித வள அமைச்சர் சிவகுமாரின் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை
தற்போதைய செய்திகள்

மனித வள அமைச்சர் சிவகுமாரின் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் மினால் மனித வள அமைச்சர் வி. சிவகுமா​ர் இன்று விசாரணை செய்யப்பட்டுள்ளார். காலை 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட 52 வயதான சிவகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்நியத் தொ​ழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்​சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் தமது இரண்டு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் அமைச்சர் சிவகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு அமைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் சிவகுமாரின் அரசியல் அந்தரங்க செயலாளரான மகேஸ்வரி, அமைச்சரின் சிறப்பு அதிகாரி சுகுமாறன் மற்றும் ஈப்போவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையில் ​மூவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்குச் சென்ற சிவகுமாரிடம் எத்தனை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறி​த்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Related News