கோம்பாக், செப்டம்பர்.10-
கோம்பாக்கிக் வீடு ஒன்றின் மேற்கூரையின் மேல் அமர்ந்திருந்த சிறுத்தையைக் கண்டு, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர்.
கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், தாமான் ஶ்ரீ கோம்பாக் ஹைட்ஸ் என்ற பகுதியில், வீடு ஒன்றின் கூரையில் சாவகாசமாக அமர்ந்திருந்த விலங்கு ஒன்றைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோலாலம்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அது சிறுத்தைப் புலி தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர், சுமார் 20 நிமிடங்களில் அச்சிறுத்தையை மீட்ட அவர்கள், அதனைக் கோலாலம்பூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.








