கடந்த வாரம் மூதாட்டி ஒருவரிடம் கொள்ளையடித்ததுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக 32 ஆடவர் ஒருவர் இன்று தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
எஸ், சரண் என்ற அந்த நபர், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் தைப்பிங், லாருட் மாத்தாங், தாமான் அசாம் மாஜு என்ற இடத்தில் 75 வயது மூதாட்டிக்கு சொந்தமான ஆபரணங்களை கொள்ளையிட்டதுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக குற்றஞ்சட்டப்பட்டுள்ளார்.
2 மாத சிறைத் தண்டனையை நிறைவு செய்து விட்டு கடந்த மாதம் வீடு திரும்பியதாக கூறப்படும் அந்த ஆடவர், மறுபடியும் ஒரு மூதாட்டியிடம் கை வரிசையை காட்டியுள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அந்த மூதாட்டியிடமிருந்து 10 வெள்ளி ரொக்கம், ஒரு தங்கச் சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்ததுடன் அந்த மூதாட்டியை காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








