Oct 30, 2025
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் GBS வருவாய் 28.14 பில்லியன் ரிங்கிட்டாக உயரும்
தற்போதைய செய்திகள்

2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் GBS வருவாய் 28.14 பில்லியன் ரிங்கிட்டாக உயரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.30-

அண்மைய காலமாக, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தின் காரணமாக உலக அரங்கில், மலேசிய அனைத்துலக வணிகச் சேவை அதிவளர்ச்சியடைந்துள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இன்று காலை தாம் தொடக்கி வைத்த GBS ASEAN உச்சநிலை மாநாடு 2025 இதற்குச் சான்று பகர்கிறது என்றார் கோபிந்த் சிங்.

“GBS 5.0 மனிதரை மையப்படுத்திய, செயற்கை நுண்ணறிவின் வழி, பெறப்படும் விளைவை மையமாகக் கொண்டது என்கிற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Global Business Services எனும் அனைத்துலக வணிகச் சேவைகள் என்பது உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த சேவைகளின் தொகுப்பாகும். இதில் நிதி, மனிதவள மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவை அடங்கும்.

இந்த உச்சநிலை மாநாடு இரண்டு முக்கிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. 2025- ஆம் ஆண்டின் GBS மலேசியா அரையாண்டு அறிக்கை, மற்றும் மலேசிய அனைத்துலக வணிகச் சேவை அமைப்புக்கும், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன இந்த மாநாட்டில் சிறப்பம்சங்களாகும் என்று கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவில் 2022ஆம் ஆண்டிலிருந்து GBS நிறுவனங்கள் 66.8 விழுக்காட்டை அதிகரித்திருக்கும் நிலையில், இதனால் தற்போது மொத்தம் 749 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மூலதன முதலீடுகள் 13.5 மடங்காக உயர்ந்துள்ள நிலையில், 2021ஆம் ஆண்டு ரிங்கிட் 0.73 பில்லியனிலிருந்து, 2024ஆம் ஆண்டில் 9.87 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு கண்டுள்ளது என்று கோபிந்த் சிங் விளக்கினார்.

Related News