Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு கால ஆட்சியில் மக்களின் வருமான உயர்த்தப்படும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை ரசாங்கம் இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளது. இந்த இரண்டவாது ஆண்டில் மக்கள் வருமானத்தை உயர்த்த அரசாங்கம் உறுதி பூண்டு இருப்பதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் Fahmi fadzil தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வாரின் ஆட்சியின் கீழ் மலேசியாவின் பொரளாதார வடிவமைப்பு மாற்றம் கண்டு வருகிறது. பொருளாதரம் மீட்சிக் காணத் தொடங்கியுள்ளது. இந்த பொருளியல் வளர்ச்சியில் நாடு மேன்மையுறும் அதேவேளையில் மக்களின் வருமானத்தையும் உயர்த்துதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெர்னாமா டிவி தயாரிப்பில் மலேசியா நலமா? என்ற சிறப்பு நேர்காணலில் இன்று பேட்டியளித்த தொடர்புத்துறை, இலக்கவில் அமைச்சரான ஃபஹ்மி ஃபட்சில் இவ்விவரத்தை தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார் பொறுப்பேற்ற முதலாவது ஆண்டில் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார். அரசாங்கத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாமல் அரசியல் ரீதியாக அதன் அடித்தளத்தை பிரதமர் வலுப்படுத்தியுள்ளார்.

இந்த இரண்டாவது ஆண்டில் மக்களின் வருமானத்தை உயர்த்துவதே ஒற்றுமை அரசாங்கத்தன் உறுதிபாடாகும், முழு கவனமாகும் என்று ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

Related News