Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மாணவி பெற்றெடுத்த குழந்தையை மறைத்து அப்புறப்படுத்திய வழக்கில் காதலன் கைது
தற்போதைய செய்திகள்

மாணவி பெற்றெடுத்த குழந்தையை மறைத்து அப்புறப்படுத்திய வழக்கில் காதலன் கைது

Share:

திரங்கானு, டுங்குனில் உள்ள கல்விக்கழகம் ஒன்றின் மாணவர் விடுதி கழிவறையில் 19 வயது மாணவி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில், அவரது காதலன் என நம்பப்படும் 24 வயது மெக்கானிக் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் அப் ஹாலிம் நிக் மாட் கூறுகையில், குழந்தையின் பிறப்பை மறைத்து அதன் உடலை ரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படும் இவ்வழக்கு குற்றவியல் சட்டம் 318ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

கோலாலம்பூரைச் சேர்ந்த அந்த மெக்கானிக், நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஜாலான் பந்தாய் தெலுக் லிபாட், டுங்குனில் கைது செய்யப்பட்டதாகவும், மாணவி நேற்று மாலை 6 மணிக்கு டுங்குன் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டு, உடல்நலக் காரணங்களால் பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு மாணவி, தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே விடுதி கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும், பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்ததாகவும் நிக் அப் ஹாலிம் கூறினார்.

குழந்தையின் உடலை அறைத் தோழிக்குத் தெரியாமல் தனது லாக்கரில் வைத்திருந்த மாணவி, பின்னர் காதலனைத் தொடர்பு கொண்டு உடலை ரகசியமாகப் புதைக்க உதவி கோரியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related News