ஒற்றுமை அரசாங்கத்தின் மீது பெரிக்கத்தான் நேஷ்னல் பொறாமைக் கொள்ள வேண்டாம் என அம்னோ கட்சியின் பொது செயலாளர் டத்தோ அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறிய கருத்திற்குப் பெர்சத்து கட்சியின் இளைஞர் படை தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கம் மீது தங்களுக்கு எந்தவொரு பொறாமையும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் பொது மக்களின் குரலை மட்டுமே தாங்கள் எழுப்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதாரம் உயர்த்தப்படவில்லை என்றும் ஒற்றுமை அரசாங்கம் பொய் வாக்குகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக அஹ்மத் ஃபய்சல் தெரிவித்தார்.








