Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தந்தையின் கைக்கு இடுக்கில் சிக்கி மூன்று மாத ஆண் குழந்தை மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தந்தையின் கைக்கு இடுக்கில் சிக்கி மூன்று மாத ஆண் குழந்தை மரணம்

மலாக்கா, ஜூன்.19-

தனது மூன்று மாத ஆண் குழந்தையைத் தூக்கி வைத்திருந்த 30 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென்று மாரடைப்புக்கு ஆளாகி உயிரிழந்தார். அப்போது கைக்குழந்தை அவரின் கையின் இடுக்கில் சிக்கி மரணம் அடைந்தது. இந்தச் சோகச் சம்பவம் இன்று காலையில் மலாக்கா, கம்போங் பெரிகி ஹாங் துவாவில் உள்ள அந்த நபரின் வீட்டில் நிகழ்ந்தது.

அப்போதுதான் வீட்டிற்குத் திரும்பிய அந்த நபரின் மனைவி, வீட்டில் தனது கணவர் சுயநினைவு இழந்த நிலையில் கீழே கிடப்பதைக் கண்டுள்ளார். குழந்தையை தேடிய போது, குழந்தை தனது கணவரின் கைக்கு இடையில் சிக்கி மூச்சடைத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினார்.

இந்தச் சம்பவத்தில் அந்த மாதுவின் கணவரும், குழந்தையும் இறந்து விட்டது மருத்துவக் குழுவினரால் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இறப்பிற்கானக் காரணத்தைக் கண்டறிய சவப்பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →