Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்

Share:

கிளந்தான், குவா மூசாங் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, நுரையீரலில் நீர் வழிந்ததால், விரைவு பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில், கோத்தா பாருவைச் சேர்ந்த 55 வயதுடைஙாவாங் மாட் அடாம் என்ற அந்த ஆடவர் பேருந்தின் பயணிகள் இருக்கையில் மயங்கி விழுந்த நிலையில் காணப்பட்டதாகவும், இச்சம்பவம் குறித்து மற்றொரு பேருந்து ஓட்டுநரிடமிருந்து தமக்கு அழைப்பு வந்ததாகவும் குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதெண்டன் சிக் சூ ஃபூ தெரிவித்தார்.
மரணத்திற்கு காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்ட போது, அதில் எவ்விதமான குற்றவியல் தன்மை இல்லை என்றும், ‘Acute Pulmonary Edema' என்பதே மரணத்திற்கான காரணம் என்று பிரேதப் பரிசோதனை கண்டறியப்பட்டதாக சிக் சூ ஃபூ குறிப்பிட்டார்.

Related News