Mar 14, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ ஜனாசந்திரன் முனியனுக்கு அந்தோணி லோக் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

டத்தோ ஜனாசந்திரன் முனியனுக்கு அந்தோணி லோக் வாழ்த்து

Share:

மலேசிய போக்குவரத்து அமைச்சின் தலைமை பொதுச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியன், ஜுசா A தர நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

டத்தோ ஜனசந்திரனின் பதவி உயர்வுக்கான அங்கீகார கடிதத்தை அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது சுகி அலி வழங்கியதுடன் தமது பாராட்டுகளையும் தெரவித்துக்கொண்டார்.

அமைச்சின் ஒன்றின் தலைமைப் பொதுச் செயலாளராக உயர் பதவியை வகிக்கும் இந்திய சமூகத்தை சேர்ந்த மூத்த அதிகாரியாக விளங்கும் டத்தோ ஜனசந்திரனின் , ஜுசா A தரத்திலான பதவிக்கு உயர்த்தப்பட்டு இருப்பதற்கு போக்குவரத்து அ மைச்சர் அந்தோணி லோக் தமது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட டத்தோ ஜனசந்திரன், இதற்கு முன்பு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக பதவி வகித்தார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் சிறப்புத் தேர்ச்சியும், நிர்வாகத்துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றவரான 56 வயது டத்தோ ஜனசந்திரன், இதற்கு முன்பு கல்வி அமைச்சு, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு மற்றும் புறநகர் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சு, மலேசிய கரூவூலம், பிரதமர் துறை , நிதி அமைச்சு உட்பட பல்வேறு அமைச்சுங்ககளிலும், அரசு இலாகாக்களிலும் துணை செயலாளராகவும், துணை தலைமை செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து