புத்ராஜெயா, ஆகஸ்ட்.23-
உயர்கல்வியை முடித்துள்ள 10 ஆயிரம் வங்காளதேச மாணவர்கள், மலேசியாவில் வேலை செய்வதற்குத் தாம் அனுமதி அளித்து இருப்பதாகக் கூறப்படுவதை உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் மறுத்துள்ளார்.
அண்மையில் கெடா மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஹைம் ஹில்மான் அப்துல்லா, தமக்கு எதிராகக் கூறியுள்ள இத்தகையக் குற்றச்சாட்டு உண்மையல்ல என்று டாக்டர் ஸம்ரி குறிப்பிட்டார்.
உயர்க்கல்வி தொடர்புடைய விவகாரங்களைப் பற்றி பேசும் போது கெடா மாநிலத்தின் அந்த ஆட்சிக்குழு உறுப்பினர் மிகக் கவனமாகப் பேச வேண்டும் என்று டாக்டர் ஸம்ரி வலியுறுத்தினார்.
வங்காளதேசத்தில் உயர்க்கல்வி முடித்த பத்தாயிரம் மாணவர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது தொடர்பில் தாம் எந்தச் சமயத்திலும் பேசவில்லை என்று டாக்டர் ஸம்ரி தெளிவுபடுத்தினார்.








