காஜாங், ஜூலை.25-
சிலாங்கூர், செராஸ், பத்து 9- னில் வழிப்பறி கொள்ளையனை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் எட்டு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.10 மணியளவில் 36 வயது பாலர் பள்ளி ஆசிரியரை மடக்கிக் கொள்ளையிட முயற்சி செய்ததாக நம்பப்படும் வழிப்பறிக் கொள்ளையன் ஒருவர் பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டான்.
பின்னர் அந்த கொள்ளையனைப் போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாகவே கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை எட்டு நபர்கள் பிடிபட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.








